அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, சுமார் 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் கட்டிடத்தை திறந்து வைத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மையங்களை பார்வையிட்டு, ரத்த பரிசோதனை மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story