அரசு விழாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி.. பாஜக MLA, MPயுடன் மேடையில் போட்டோ - புகைப்படம் வெளியிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

x
  • பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
  • கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் வெடித்த கலவரத்தின் போது, கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்ததோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யபட்டனர்.
  • இந்த வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான 11 பேரையும், கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்தது.
  • இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
  • இதற்கிடையே பாஜக எம்.பி. ஜஸ்வந்த சிங் பபோர் மற்றும் எம்.எல்.ஏ. சைலேஷ் பபோர் பங்கேற்ற அரசு விழாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பலரையும் கொந்தளிக்க செய்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்