போபால் விஷவாயு கசிவு விபத்து வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி
- போபால் விஷவாயு விபத்து தொடர்பாக, டாவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் கூடுதல் இழப்பீடாக, ஏழு ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட கோரி, கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
- இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு செய்யாமல் விட்டது மத்திய அரசின் மிகப்பெரிய கவனக்குறைவு என கருத்து தெரிவித்தது.
- முறைகேடு நடக்கும்பட்சத்தில் மட்டுமே இழப்பீடு விவகாரத்தில் தலையிட முடியும் என தெரிவித்த நீதிபதிகள், 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டியதன் அடிப்படை காரணங்களை மத்திய அரசு முன் வைக்கவில்லை என்றனர்.
- மேலும் ரிசர்வ் வங்கியிடம் உள்ள 50 கோடி ரூபாய் தொகையை கொண்டு, மீதமுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும்படி கூறி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Next Story