ஒரே நேரத்தில் பல அதிர்ச்சிகளை கொடுத்த கூகுள், பேஸ்புக், ட்விட்டர் | Social Media

x

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் கடந்த ஜனவரியில் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது...

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டின் 3ம் காலாண்டில் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று ஜனவரியில் அறிவித்தது...

கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம், கடந்த வாரம் மீண்டும் 9 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த பிறகு கடந்த அக்டோபர் மாதம் 3 ஆயிரத்து 700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு பல கட்ட பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...

அதேபோல் ஜூம் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ஆயிரத்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது...

உலகின் முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபையும் இதில் இருந்து தப்பவில்லை... தனது பணியாளர்களில் 6 சதவீத பேரை மொத்தமாகப் பணிநீக்கம் செய்தது.

அக்சென்ட்சர் நிறுவனம் சமீபமாக 19 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில்,

மெக்கின்சி நிறுவனம் 2 ஆயிரம் பேரையும், ஐபிஎம் நிறுவனம் 3 ஆயிரத்து 900 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்