"வாட்டிய வெயிலுக்கு குட்பை..!" - தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

x

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மித முதல் கனமழை பெய்தது.தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. மொரப்பூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளர்.திண்டுக்கல் மாவட்டம் தருமத்துபட்டி மற்றும் அதன் சற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால், முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்