சீனியர் CITIZENக்கு GOOD நியூஸ் சொன்னதா பட்ஜெட் 2023 !?

x

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான டெபாசிட் வரம்பை 30 லட்சமாக உயர்த்தி, அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்துக்கான உச்சவரம்பு பட்ஜெட்டில் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட உச்சவரம்பு 15 லட்ச ரூபாயில் இருந்து 30 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இதன்படி, மூத்த குடிமக்கள் இனி 30 லட்சம் வரைவரை நிரந்திர வைப்பில் வைத்து கொள்ள முடியும்.

இதைபோல் அஞ்சலக நிரந்திர வைப்பில் பணத்தை டெபாசிட் செய்து, மாதம்தோறும் வட்டி பெறும் திட்டத்தில்,

உச்சவரம்பு நான்கரை லட்ச ரூபாயில் இருந்து 9 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

இதுவே ஜாயிண்ட் அக்கவுண்ட் என்ற கூட்டு வங்கி கணக்கிற்கு ஏற்கனவே உள்ள உச்சவரம்பான 9 லட்ச ரூபாய், 15 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம், தங்களின் கடைசி காலங்களில் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தில் இருந்து வரும் வட்டி வருமானத்தை பெரிதும் நம்பியுள்ள மூத்த குடிமக்கள் மேலும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்