பள்ளிகளில் வரப்போகிறது புதிய திட்டம் - பேரவையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

x
  • சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன், காலநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துக்கொள்ளும் வகையில், முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 25 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
  • 2023-24 ஆம் ஆண்டில் மேலும் 50 பள்ளிகளில் 10 கோடி மதிப்பீட்டில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
  • மேலும் கால நிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஆயிரம் குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
  • தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்