குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் - தமிழகத்தில் முதன்முறையாக..

x

தமிழகத்தில் முதன்முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். நீலகிரி மாவட்டம் உதகை அருகே, பாலகொலா மலைக்கிராமத்தில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்திற்காக ஆயிரத்து 350 மெட்ரிக் டன் மத்திய உணவு கழகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் 2 லட்சத்து, 29 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு கேழ்வரகு இல்லாததால், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கியூஆர் கோட் மூலம் பணத்தை செலுத்தி ரேஷன் பொருட்கள் பெறும் திட்டத்தை, உதகை பாலகொலா கிராமத்தில், அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்