அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர்காக தங்க குதிரை வாகனம்..மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா ஏற்பாடுகள்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, அழகர்கோயில் ஆலயத்தில் இருந்து தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலூர் அருகே கள்ளழகர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா 1-ஆம் தேதி தொடங்குகிறது. வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்திற்காக வரும் 3-ஆம் தேதி, அழகர்கோயிலில் இருந்து மாலை கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். 5-ஆம் தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் இறங்குகிறார். இதற்காக அழகர்கோயில் ஆலயத்தில் இருந்து தங்ககுதிரை வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் ஆகிய மூன்று வாகனங்கள், மதுரைக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story