இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கம்..கடலில் வீசி தப்பியோட்டம்.. 3 முறை தப்பாத ஸ்கெட்ச் | Srilanka

x

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் ராமநாதபுரத்தில் அதிகாரிகளைக் கண்டதும் கடலில் வீசப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில், 3வது நாளாக முத்துக்குளிக்கும் வீரர்களை வைத்து தங்கம் தேடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பைபர் படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அன்று காலை முதலே சுங்கத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை உதவியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைபர் படகுகள் வந்துள்ளன. அதிகாரிகளைக் கண்டதும், நொச்சியூரணி கடற்கரை பகுதியில் படகை போட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் படகை சோதனை செய்த போது, அதில் தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டு, அவற்றை எடுத்துச் சென்று ராமநாதபுரம் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்துள்ளனர். மேலும், தங்கத்தைக் கடலில் வீசிச் சென்றதாக வந்த தகவலை அடுத்து, நேற்று கடலில் தங்கம் தேடப்பட்ட நிலையில், காற்றின் வேகம் காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட முத்து குளிக்கும் வீரர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ், கடலோர காவல் படை உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் இதுவரை 3 முறை இதேபோல் கடத்தல் காரர்கள் தங்கத்தைக் கடலில் வீசிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 முறையும் சேர்த்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்