கோவிலுக்குள் தங்க தகடுகள் ...உயிரை உறைய வைக்கும் குளிர் - பாதுகாப்பு பணியில் வீரர்கள்
11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் உறைபனியில் இருக்கும் கேதார்நாத் ஆலயத்தின் தங்க கூரையை பாதுகாக்கும் பணியில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் குகைக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், ஆலயத்தின் கருவறையில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. சுமார் 40 கிலோ எடை கொண்ட தங்க தகடுகள் கோவேறு கழுதைகள் மூலம் மலைப்பகுதிக்கு சுமந்துவரப்பட்டு, கோயிலில் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் கடும் குளிர் காரணமாக கடந்த ஆண்டு கேதர்நாத் ஆலயம் மூடப்பட்டுள்ளதால், தங்கக் தகடுகளுக்கு பாதுகாப்பு இல்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கேதர் நாத் ஆலயத்தில் தங்க தகடுகளை பாதுகாக்கும் பணியில் இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 11 ஆயிரத்து 755 அடி உயரம் மற்றும் மைனஸ் 15 டிகிரி அளவுக்கு குளிர் நிலவும் பகுதியில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.