#BREAKING || "கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை பெற்றதே சிசிடிவி மூலம் தான்" - நீதிபதிகள் அதிரடி

x

குற்ற வழக்குகளில் ஆதாரமாக இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கையாள்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விதிகளை வகுத்துள்ளது. கோகுல்ராஜ் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கை பொறுத்தவரை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலமாகவே குற்றச்சதி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையின் சாட்சியமாக கையாள்வது குறித்து விதிகளை வகுத்துள்ளனர்.அதன்படி, பொதுவாக குற்ற வழக்குகளை பொறுத்தவரை கண்காணிப்பு கேமரா பதிவுகள் குற்றம்சாட்டப்பட்டவரின் இருப்பையும், இடத்தையும் உறுதி செய்வதற்கு உதவுகின்றன என உத்தரவில் கூறியுள்ளனர்.

இந்த ஆதாரங்களை உரிய சான்றியழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும், இல்லாவிட்டால் வலுவான ஆதாரங்கள் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அமைந்துவிடும் எச்சரித்துள்ளனர். அதனால் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்போது சம்பவ இடத்தை அடையாளம் காணும்வகையில் வீடியோ கேமராக்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.கேமரா பதிவுகளை பெறும்போது நேரத்தை குறிப்பிட்டு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும், கேமரா குறித்த தொழில்நுட்ப விவரங்களை பதிவுசெய்ய வேண்டுமென உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கேமரா பதிவுகளை ஆராயும்போது, வேறொரு கேமராவில் படம்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள்னர். பதிவுகளை சேகரிக்கும்போது, ஏற்கன்வே உள்ள ஃபார்மெட்டிலேயே சேகரிக்க வேண்டும் என எலக்ட்ரானிக்ஸ் எவிடன்ஸ் இன் கோர்ட் ரூம் என்கிற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களில் தடயவியல் ஆய்விற்கு பிறகு டிவிடி அல்லது சிடி தளத்தில் பதிவிறக்கம் செய்து அதற்குரிய சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.இந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும், அவற்றை கண்காணிப்புடன் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்