கோகுல்ராஜ் கொலை - சாகும் வரை சிறை தண்டனை.. யுவராஜ் சிக்கியது எப்படி..?

x
  • சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சக தோழியான சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
  • இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது.
  • அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூன் 24ம் தேதி தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
  • இது தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றதற்கான சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்தன.
  • அதுவே இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறியது.
  • கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதற்குக் காரணம் யுவராஜ்தான் என்ற சந்தேகம் எழுந்தது.
  • இதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
  • 100 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரணடைந்தார்.
  • 2015 டிசம்பர் 25 யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார்.
  • யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, 2019ம் ஆண்டு
  • மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 2022 மார்ச் 8ல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
  • இந்தத் தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர்.
  • 2022 நவம்பரில் இந்த வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை ஆஜராக உத்தரவிட்டு அவரிடம் விசாரணை நடத்திய மதுரை கிளை, சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
  • பின்னர் நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின், மேல் முறையீடு வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டு 2023 பிப்ரவரியில் தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டது.
  • இந்நிலையில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ​ங்கியது...

Next Story

மேலும் செய்திகள்