கோகுல்ராஜ் கொலை வழக்கு - திருச்செங்கோடு கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி யுவராஜ் உட்பட 10 பேருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுங்காவல் தண்டனைகள் வழங்கியது
இந்த வழக்கில் யுவராஜ் தரப்பினர் திருச்செங்கோடு மலை கோயிலில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் முறையாக ஆய்வு செய்யவில்லை என குற்றம் சாட்டியும் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய மீதி ஐந்து நபர்களுக்கும் கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் அவர்களை விடுதலை செய்தது தவறு என கோகுல்ராஜின் தாயாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்ததிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஸ் மற்றும் ரமேஷ் தலைமையிலான பென்ச் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி, கோகுல்ராஜ் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் தான் திருச்செங்கோடு மலை கோவிலுக்கு செல்லவே இல்லை என்றும் பிறழ் சாட்சி கூறியதை அடுத்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் நேரில் சென்று விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கு வருகை தந்துதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் குறித்து நேரில் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஸ் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.