"குழந்தைக்கு 4 ஊசி போட்டாங்க..உடனே செத்து போச்சுனு சொல்றாங்க" வயிற்றில் அடித்து கதறும் தாய்-தஞ்சாவூரில் அதிர்ச்சி

x

அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டதால் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்ததாக கூறி பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் - கீதா தம்பதியின் 10 மாத குழந்தை தரணிகாவுக்கு தடுப்பூசி போட வேண்டுமென துறையூர் அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழைத்துள்ளனர். அதன்படி தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து காசவளநாடு புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசியை செலுத்தியதால் குழந்தையின் உடல்நிலை மோசமானது.

உடனே மருத்துவரின் காரியிலேயே குழந்தையை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என 4 மணி நேரத்திற்கும் மேலாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்