"ஆணவக்கொலை செய்வதற்கு முன் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க" எஸ்பி அலுவலகத்தில் இளம்ஜோடி கதறல்

x

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள குறுக்கத்தி பள்ளிச்சந்தம் தெருவை சேர்ந்தவர் இளம்பரிதி. இவரும் அரசாணி குளத்தைச் சேர்ந்த சௌமியாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டை விட்டு இருவரும் வெளியேறி, சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் கடந்த 22 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதையறிந்த சௌமியாவின் அண்ணன் பிரகதீஸ்வரன், ஆணவக் கொலை செய்து விடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த இளம் ஜோடிகள், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையுடன் சென்று தங்களை ஆணவக்கொலை செய்யும் முன்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்