"கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயமாக அணிய வேண்டும்" - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு

x

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்களில், பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைமையிலான அரசாங்கம், ஹிஜாப் அணிவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில், மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியைகள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கண்காணிக்கப்படும் என்றும், ஹிஜாப் அணியாமல் உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு மாணவிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்