ஓடி வந்து பேருந்தில் ஏறிய பெண் ...ஓட்டுநரை வெட்டிய இளைஞர்கள் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
பண்ருட்டி அருகே அரசு பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், குடுமியான் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இலுப்பையூர் கிராமத்தில் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்தை வழிமறித்த இரண்டு இளைஞர்கள், ஓட்டுநர் முருகனை கத்தியால் தலையில் வெட்டினர். இதைத் தொடர்ந்து, காயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், இலுப்பையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை சற்று தள்ளி நிறுத்தியதால், ஒரு பெண் ஓடி வந்து பேருந்தில் ஏறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தேவா மற்றும் ஆதி ஆகிய இருவர் கஞ்சா போதையில் ஓட்டுநரை வெட்டியதாகவும் தெரிகிறது. சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story