படிக்க உதவி கோரிய சிறுமி... உடனடியாக ஆக்சன் எடுத்த முதல்வர் ஸ்டாலின்...
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கடந்த 8ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி வந்தபோது, காவியா என்ற சிறுமி, ஸ்டாலின் அங்கிள்... படிக்க உதவி செய்யுங்கள் என சத்தமாக கோரிக்கை வைத்தார். அதனைக் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமியின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி காவியாவின் தாய் கவிதாவிடம், கல்வி உதவித்தொகையாக 61 ஆயிரம் ரூபாய்கான காசோலையை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
Next Story