5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி... ஆவடி மருத்துவமனையில் நடந்தது என்ன? - பதறி தவித்த பெற்றோர்

x

ஆவடியைச் சேர்ந்த் ஜெயபிரகாஷ் என்பவரின் 9 வயது மகள் நேகரிகா, 5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். அந்த சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரை ஆவடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர், தங்களிடம் சிகிச்சை வசதி இல்லை என்று கூறி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்காமல், தனியார் ஆம்புலன்சில் செல்லுமாறு கூறியதாகவும் தெரிகிறது. பின்னர், ஆவடியில் ஒரு தனியார் மருத்துவமனையில், சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தி, உணவுக் குழாயில் சிக்கியிருந்த நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இந்நிலையில், ஆவடி அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது சிறுமியின் தந்தை, ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், குழந்தைகள் நாணயத்தை விழுங்கினால், அதை எடுப்பதற்கான மருத்துவ வசதிகள், ஆவடி அரசு மருத்துவமனையில் இல்லை என்று அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காவலன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்