டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண்..! ஏறி இறங்கிய பேருந்து... மகன் கண் முன்னே நிகழ்ந்த கோரம்

x

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண், மகன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய கொரோட்டி பிரீடா. இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்து, அவர் மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்