சென்னையின் முக்கிய சாலையில் சாய்ந்து விழுந்த ராட்ச மெட்ரோ கம்பிகள்

x

மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் தூண்களுக்கான கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இடையேயான செம்மொழி சாலையில் மெட்ரோ ரயில் செல்வதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு 60 அடி உயரத்திற்கு தூண்கள் அமைப்பதற்கான கம்பிகள் கட்டப்பட்டன.

அப்போது திடீரென அந்த கம்பிகள் சாலையை நோக்கி சாய்ந்தன. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், ராட்சத கிரேண் வரவழைத்து, நான்கு மணி நேரத்தில் கம்பிகளை அப்புறப்படுத்தினர்.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்