மத்திய அரசின் பொது சிவில் சட்டம் - மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவில், மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோழிக்கோடு மாநகராட்சி கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கான சுற்றறிக்கை கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பா.ஜ.க கவுன்சிலர் நவ்யா, மாநகராட்சியின் மேயர் மற்றும் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், கோழிக்கோடு மாநகராட்சியில், மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் பொது சிவில் சட்டம் - மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Next Story