கைகோர்க்கும் GE-HAL...! இந்தியாவிற்கு எதிராக 7 வழக்குகள்... WTO-ல் தொடுத்துள்ள அமெரிக்கா - பிரதமரின் பயணம் மேஜிக் செய்யுமா..?

x

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால், இந்தியாவிற்கு கிடைக்க உள்ள நன்மைகள், சாதகங்கள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்லும் (நேற்று அமெரிக்கா சென்ற )பிரதமர் மோடி, வியாழன் அன்று ஜோ பைடனை சந்திக்க உள்ளார். வெள்ளியன்று அமெரிக்க நாடாளுமன்றத் தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அமெரிக்க தொழிலதிபர் களையும், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் விஜயத்தின் போது, அமெரிக்காவின் ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனம், மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏவியேசன் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் போர் விமானங்களுக்கான ஜெட் எஞ்ஜின்களை தயாரிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக வாய்புள்ளது.

ஜூன் 15ல் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமக் கூட்டத்தில் இந்தியாவின் கடலோர கண்காணிப்பை தீவிர படுத்த 31 ஆளில்லா விமானங்களை அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள ஏழு வழக்குகளை, மோடி பைடன் சந்திப்பின் போது, சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது.

இந்தியர்கள், அமெரிக்காவில் பணி புரிய, விசா பெறுவதற்கு 600 நாட்கள் வரை தாமதம் ஆகிறது. இதை குறைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்தோ பசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் சேர இந்தியா விற்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கும் என்று கருதப்படு கிறது.

எலான் மஸ்க் உள்ளிட்ட 20 முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்தியாவில் கம்யூட்டர் சிப்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த இது வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் அமெரிக்க பயணம் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் என்று கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்