தோண்ட தோண்ட கஞ்சா - விழுப்புரம் அருகே அதிர்ச்சி
அரகண்டநல்லூர் அருகே ஏரி பகுதியில் புதைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கொடுங்கால் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞரை கஞ்சா வைத்திருந்த புகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே அவர் ஏரி பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Next Story