வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கஞ்சா டோர் டெலிவிரி.. வடமாநில இளைஞர்கள் அதிரடி கைது - கோவையில் பரபரப்பு

x

கோவை, சூலூரில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து டோர் டெலிவிரி மூலம் கஞ்சாவை விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவை சேர்ந்த துக்கிராம் பாரிக் மற்றும் சிரஞ்சீவி ரூட் ஆகியோர் போலீசாரின் ரோந்து பணியின் போது கஞ்சாவுடன் சிக்கிய நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காய வைக்கப்பட்ட கஞ்சாவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து டோர் டெலிவிரி மூலம் இருவரும் விற்பனை செய்து வந்தது தெரியவர, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். இதில், ஒடிசாவில் இருந்து 7 ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சாவை வாங்கி, சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை இருவரும் தமிழகத்தில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்