SMS அனுப்பி 17.50 லட்ச பணத்தை ஆட்டைய போட்ட மர்ம கும்பல் கைது

x

தஞ்சாவூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு, அவர் இரண்டரை லட்ச ரூபாய் லோனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து, குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட சுரேஷிடம் பேசிய மர்மநபர், சுரேஷின் ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு விபரங்களை பெற்றுள்ளார். இதனையடுத்து சுரேஷின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 25 ஆயிரம் திருடு போயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார், கார்த்திசன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 42 செல்போன்கள், பயன்பாட்டில் இருந்த 21 சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் 17 மாவட்டங்களை சேர்ந்த 31 பேரிடம், 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்