திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம்.. தடுத்து நிறுத்திய போலீஸ் - திடீர் பரபரப்பு

x

சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விநாயகர் ஊர்வலத்தை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் சாலை வழியாக நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பினர் தடையை மீறி அவ்வழியாக ஊர்வலம் செல்ல முயன்றனர்.

அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னனியின் பொதுச் செயலாளர் முருகானந்தம், தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை பிரிவின் மாநில தலைவர் அமர்பிரசாத் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்