ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடை சட்டம் - தண்டனை விவரங்கள் என்ன?

x

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்றும், இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்