எகிறி அடிப்பது போல் வந்த கம்பீர்.. அசராமல் பாய்ந்து வந்த கோலி - ரணகளமான ஆடுகளம்..!

x

ஐபிஎல் போட்டியின்போது விராட் கோலி மற்றும் கம்பீர் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடைபெற்ற போட்டியில், லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. போட்டியில் வெற்றி பெற்றதை விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

மேலும், பெங்களூருவில் இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை லக்னோ அணி வீழ்த்தியதும், அந்த அணியின் ஆலோசகர் கம்பீர், பெங்களூரு ரசிகர்களை வாயை மூடுமாறு சைகை செய்திருந்தார். அதை நினைவு கூறும் வகையில், விராட் கோலி, நேற்று லக்னோ அணி ரசிகர்களை வாயை மூடுமாறு சைகை செய்தார்.

இதனால் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சக வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, கம்பீரும், கோலியும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லக்னோ வீரர் நவீனுக்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்