'வருங்கால மனைவி' என நினைத்து போனில் பேசிய மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

பெண் குரலில் பேசி, திருமண ஆசைக்காட்டி 21 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபரை சென்னை போலீசார் கைது செய்தனர்.



சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த ரகுராமிற்கு அவரது தந்தை பாலசுப்ரமணியன் பெண் பார்த்துள்ளார். அப்போது பாலசுப்ரமணியனை தொடர்பு கொண்ட கல்யாணராமன் என்பவர், தனது அண்ணனின் மகளுக்கு வரன் பார்ப்பதாக கூறி ரகுராமின் தொடர்பு எண்ணை வாங்கியுள்ளார்.

பின்னர், ஐஸ்வர்யா என்பவர் கல்யாணராமன் கூறிய மணப்பெண்ணாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு ரகுராமை தொடர்பு கொண்டுள்ளார்.

சில நாட்களில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறிய ஐஸ்வர்யா, ரகுராமிடம் இருந்து 20 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டது அறிந்த ரகுராம், நுகங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையில், சேலத்தை சேர்ந்த தாத்தாதிரி என்பவர் தனது பெயரை கல்யாணராமன் என மாற்றி கொண்டு, மணப்பெண் ஐஸ்வர்யா போல பெண் குரலில் பேசி பணத்தை பறித்தது அம்பலமானது.

மேலும், மோசடி செய்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாட்டில் தாத்தாதிரி இழந்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்