சீறிய புலி.. துள்ளிய மான்கள்..துல்லியமாக போட்டோ எடுத்த பிரதமர்..ஒரே வார்த்தையில் உருகிய பொம்மன் - பெல்லி - ஸ்பெஷல் மொமெண்ட்ஸ்..!

x


தனது தென்மாநில பயணத்தின் போது... நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக

வந்தடைந்த பிரதமர் மோடி... யானைகளுக்கு கரும்பூட்டி மகிழ்ந்த காட்சி... இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.


தம்மை வரவேற்ற மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த பிரதமர்... தாம் கரும்பூட்டியதும் உற்சாக மிகுதியில் தும்பிக்கையைத் தூக்கிய

யானைகளை கண்டு புன்னகைத்தார்.

யானை பாகன்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளாக மாற்றுவதில் இருக்கும் சிக்கல் குறித்தும், பாகன்களின் கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

பின் வனத்துறையில் T-23 புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய தெப்பக்காடு கிராமத்தை சார்ந்த வாட்சர்களிடம் கலந்துரையாடினார்.

பிறகு ஆஸ்கர் விருது வென்ற தம்பதியரான பெல்லி-பொம்மனை சந்தித்து உரையாடிய பிரதமர்... அவர்களுக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.

தங்களை பிரதமர் நேரில் சந்தித்து பாராட்டியதால் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்த பெல்லி - பொம்மன் தம்பதியர்... தாங்கள் பிரதமருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்ததையும்... தங்களது கள்ளங் கபடம் இல்லாத உள்ளத்தையும் வார்த்தைகளாக வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடியிடம் தங்களுக்கான வீடு வசதி குறித்த கோரிக்கையும் பெல்லி - பொம்மன் தம்பதியர் முன்வைத்தனர்.

இப்படி ஆஸ்கர் தம்பதியரை மட்டுமல்லாது... தெப்பக்காடு முகாமில் மட்டும் சுமார் 55 நிமிடம் செலவிட்டார் பிரதமர் மோடி.

தந்தி டிவி செய்திகளுக்காக கூடலூர் மற்ரும் நீலகிரியில் இருந்து செய்தியாளர்கள் சுரேஷ் குமார் மற்றும் வில்லியம்


Next Story

மேலும் செய்திகள்