ராணுவ பணிக்கு செல்ல முடியாத விரக்தி... பிறந்தநாள் அன்று இளைஞர் விபரீத முடிவு

x
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே, ராணுவ பணிக்கு செல்ல முடியாத விரக்தியில், பிறந்தநாள் அன்றே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • உத்தமபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்பவர், ராணுவ பணியில் சேர்வதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
  • 21 வயது வரை மட்டுமே ராணுவ பணியில் சேர முடியும் என்பதால், அதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஹரிஹரனுக்கு 22வது பிறந்தநாள் வந்துள்ளது.
  • இனி ராணுவ பணியில் சேர முடியாது என நினைத்து, விரக்தியில் பிறந்தநாள் அன்றே, , ஹரிஹரன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்