போதை பொருள் கடத்தல் முதல் பயண சீட்டு ஸ்கேம் வரை... மதுரையில் அரங்கேறிய ரயில்வே முறைகேடுகள்

x

கடந்த ஆண்டு, மதுரை கோட்டத்தில் முறைகேடாக ரயில் பயண சீட்டு விற்பனை செய்த 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், மதுரை கோட்டத்தில் ரயில் பயண சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் 122 கிலோ 850 கிராம் கஞ்சா கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்திய 4 ஆயிரத்து 684 பயணிகளிடம் இருந்து அபராதமாக 9 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அகில இந்திய அளவில், பயணச் சீட்டுகளை முறைகேடாக விற்ற 5 ஆயிரத்து 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்