பிரபந்தம் பாடுவதில் தொடங்கி பிரசாதம் பெறுவதிலும் மோதல்

x

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழாவில், வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, புண்ணியகோடி விமான வாகன உற்சவம் நடைபெற்றது. வேதபாராயணங்கள் பாடியதில், வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், பெருமாளின் தீர்த்தம், சடாரி பெறுவதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தென்கலை பிரிவினருக்கு சடாரி சாற்றியபோது, அவர்களின் தலையில் கைவைத்து, வடகலை பிரிவினர் தடுத்ததுடன், சடாரியையும் தட்டிவிட்டுள்ளனர். திவ்ய பிரபந்தம் பாடுவதில் தொடங்கிய மோதல், தீர்த்தம், சடாரி பெறுவதில் மட்டுமின்றி, பிரசாதங்களைப் பெறுவதிலும் இருந்து வருகிறது. வேதபாராயணம் செய்வோருக்கு பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், தென்கலை பிரிவினருக்கும் தோசை, வடை வழங்கப்பட்டதால், அதனை வடகலை பிரிவினர் கீழே வீச முற்பட்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்