பகல் 12 முதல் மாலை 4 மணி வரை.. வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் - மேற்குவங்க அரசு அதிரடி அறிவிப்பு

x

மேற்குவங்க மாநிலத்தில் வெப்ப அலை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கல்வி நிலையங்களுக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலை காரணமாக, இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வி நிலையங்களுக்கு, நாளை முதல் சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் 12 முதல் மாலை 4 மணி வரை, பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்