முன்விரோதத்தால் எதிரிகளான நண்பர்கள்...நண்பனையே கொன்று பழித்தீர்த்த பயங்கரம்

x

கொல்லப்பட்டவர் சதீஷ்குமார். இதே ஊரை சேர்ந்தவர். 28 வயதாகும் சதீஷ்குமாருக்கு ஒரு அண்ணன் மற்றும் தங்கை உள்ளனர். உடன்பிறப்புகள் கல்யாணமாகி செட்டில் ஆன நிலையில் சதீஷ்குமாருக்கு மட்டும் திருமணமாகவில்லை. காரணம் , சதீஷ்குமாரின் போதை பழக்கம். ஆம், கஞ்சா, சரக்கு போன்ற அனைத்து வகையான போதை வஸ்துக்களுக்கும் அடிமையான சதீஷ்குமார், ஏரியாவில் கஞ்சா விற்பனையில் கொடிக்கட்டி பறந்துள்ளார்.ஊருக்குள் பேப்பர் ரவுடியாக வளம்வந்த சதீஷ்குமார் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மினி சரித்திரபதிவேடு ரவுடியாக சுற்றிவந்த சதீஷ்குமார் நண்பர்களுடன் பிரச்சனை என்றால் சட்டென்று கை நீட்டிவிடுவார். அந்த முன்கோபம்தான் இன்று அவரின் உயிருக்கே உலை வைத்திருக்கிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையிலிருந்த சதீஷ்குமாரை, அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றுபோட்டு கட்டை மற்றும் கம்பியால் தாக்கியிருக்கிறது. அந்த படுபயங்கர தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து இறந்துள்ளார்.இதை கண்ட ஊர்காரர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். சதீஷ்குமாரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பிரவீன், தீபக் மற்றும் புகழேந்தி ஆகியோரை கைதுச் செய்து விசாரித்திருக்கிறார்கள். அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது.

சமீபத்தில் மணிகண்டன் கேங்கிற்கும் சதீஷ்குமாருக்கும் இடையில் பிரச்சனை வெடித்திருக்கிறது. வாய்தகராறு கைக்கலப்பாக மாற அத்திரமடைந்த சதீஷ்குமார் மது பாட்டிலை உடைத்து மணிகண்டன் கேங்கிலிருந்த ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நண்பர்களாக இருந்தவர்கள் சதீஷ்குமாருக்கு எதிராக மாறியிருக்கிறார்கள்.தங்களுக்கு உயிர் பயத்தை காட்டி சதீஷ்குமார் ஏரியாவில் கெத்துகட்ட நினைப்பது மணிகண்டன் தரப்பினருக்கு கொலை வெறியை தூண்டியிருக்கிறது. அந்த ஈகோவில் தான், மணிகண்டன் கும்பல் சதீஷ்குமாரை நோட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டன் கேங்கை கைதுச் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்.


Next Story

மேலும் செய்திகள்