அடிக்கடி ஆன்லைன் App-ல் ஷாப்பிங்.. திடீரென அடித்த ரூ.10 லட்சம் ஜாக்பாட்? - அதிர்ச்சியில் உறைந்த சேலம் நபர்
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர், ஆன்லைன் ஷாப்பிங் செயலி மூலம் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் இருந்து விண்ணப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று வந்துள்ளது. கடிதத்தை திறந்து பார்த்தபோது பரிசு கூப்பன் இருந்த நிலையில் ஒன்பது லட்சம் ரூபாய் பரிசாக விழுந்துள்ளதாக கூறப்பட்டு, வங்கி விவரங்களை அனுப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தனபால் உடனடியாக தனியார் ஆன்லைன் ஷாப்பிங் செயலில் சோதித்துப் பார்த்த போது அவ்வாறு எந்தவித கூப்பன்களும் அனுப்பப்படவில்லை என்பதும் போலியாக கடிதம் அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்று கடிதம் வந்தால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என, தனபால் தெரிவித்துள்ளார்.
Next Story