நாவூற வைக்கும் பிரான்ஸ் நாட்டு சமையல்... அரை மணி நேரத்தில் cheese croquettes
சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க இருக்க ரெசிபி… பிரான்ஸ் நாட்டு மக்களின் ஃபேவரைட்டு உணவாக இருக்கும் aloo cheese croquettes…
அசத்தலா தயாரிக்ககூடிய Aloo cheese croquettes…முதன் முதல்ல பிரான்ஸ் நாட்டுலதான் கண்டுபிடிச்சிருக்காங்க… பொரியல், சிப்ஸ், குழம்புன்னு உருளை கிழங்கை ஒரே மாதிரி சாப்பிட்டு சலிச்சுபோனவங்க… 1898வது வருஷம் புதுவிதமா கண்டுபிடிச்சது இந்த Aloo cheese croquettes…
கேட்கும்போதே வாயில எச்சி ஊறுர இந்த மொறு மொறு ரெசிபிய சட்டு புட்டுனு சமைக்க ஆரமிக்கலாம் வாங்க…
Aloo cheese croquettes சமைக்க தேவையான பொருட்கள்…
உருளைகிழங்கு , வெண்ணெய் , சாதிக்காய் பொடி, உப்பு, மிளகுதூள், mozzarella cheese, முட்டை, மைதா , bread crumbs, எண்ணெய்… அவ்வளோதான்… சமைக்க ஆரமிக்கலாமா…
முதல்ல மூணு உருளை கிழங்க நல்லா வேகவச்சு எடுத்து… அது மேல இருக்க தோல உறிச்சு மசிச்சிக்கனும்… அதுக்கப்புறம் 40 கிராம் வெண்ணெய அதே உருளைக் கிழங்குல போட்டு சேர்த்து கலந்துக்கனும்…
சாதாரணமா சிம்பிலா இருக்க இந்த கலவைக்கு இன்னும் கொஞ்சம் டேஸ்டு கொடுக்க… அரை ஸ்பூன் ஜாதிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுதூள், 150 கிராம் சீஸை நல்லா துறுவி சேர்த்துகனும்…
இப்போ இந்த மசாலா எல்லாம் உருளைகிழங்குல ஊறனும்ன்னா மறுபடியும் எல்லாத்தையும் ஒருதடவ கலந்துகோங்க… இப்போ இந்த கலவைல ரெண்டு முட்டைய உடைச்சு அதுல இருக்க மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து… ரொம்ப தண்ணியாவும் இல்லாம… ரொம்ப திக்காவும் இல்லாம… உருண்டை பிடிக்குற அளவுக்கு மறுபடியும் கலந்துக்கனும்…
கலந்து கலந்து கைவலிக்குதேன்னு ரெஸ்ட் எடுக்கபோயிறாதீங்க… கஷ்டப்பட்டாதான் டேஸ்டான ஸ்னாக்ஸ் சாப்பிடமுடியும்…
அடுத்து இந்த கலவைய ஒரு பிளாஸ்டிக் கவர்லையோ… இல்லன்னா கையாலயோ நீளமான வடிவத்துல உருட்டி எடுத்துக்கனும்… அடுத்த வேலய ஆரமிக்குற முன்னாடி கொல கொலன்னு இருக்க உருளை கிழங்கு கட்டியா மாறுறதுக்கு ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜ் உள்ள வைக்கனும்…
இப்போ ஒரு பாத்திரத்துல, bread crumbs, நல்லா அடிச்சு வச்ச முட்டையோட வெள்ளை கரு, அப்புறம் ஒரு கப் மைதா… தனித்தனியா எடுத்து வச்சுக்கனும்… அடுத்து உருளைகிழங்க ஒவ்வொரு துண்டா எடுத்து… மைதாவுல புரட்டி, முட்டையில முக்கி, பிரட்கிரம்ஸ்ல புரட்டி பொறிக்குறதுக்கு ரெடி பன்ணி வச்சுக்கனும்…
கடைசியா கொதிக்கிற எண்ணெய் பாத்திரத்துல ரெடி பண்ணி வச்ச உருளை கிழங்க ஒவ்வொன்னா போட்டு பொன்நிறமா வர்ர மாதிரி பொறிச்சு எடுத்தா… மொறுமொறுன்னு aloo cheese croquettes ரெடி.. சரி ஏன் இன்னும் வெயிட் பண்ணிகிட்டு… சூடு ஆறதுக்குள்ள தக்காளி சாஸோ, mayoneeseஓ என்ன இருக்கோ தொட்டு சாப்பிட ஆரம்பிங்கப்பா…