கொல்கத்தாவுக்கு Free Bus - முதல்வர் அதிரடி

x

ஒடிசாவில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என, முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில் விபத்து காரணமாக கொல்கத்தாவுக்கான வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்கத்தா செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுவதை அறிந்த முதலமைச்சர் நவீன் பட்நாயக், புவனேஷ்வர், புரி மற்றும் கட்டாக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பாலசோர் வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். புவனேஷ்வர், புரி மற்றும் கட்டாக்கில் இருந்து தினமும் சுமார் 50 பேருந்துகள் கொல்கத்தாவுக்கு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்