மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம்-"லாபம் தரும் செயல்பாடாகவே இருக்கிறது"
மகளிர் கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம் போக்குவரத்துத் துறைக்கு லாபம் தரும் செயல்பாடாகவே உள்ளது என அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார். அரசு போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தால், பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகக் கூறினார்.
Next Story