கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து..ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் - மாதம் 10 ஆயிரம் நிவாரணம் கொடுக்கணுமா..?

x

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, அக்கட்சியின் வாக்குறுதியான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெண்கள் மத்தியில் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தால் பெண்கள் அதிகளவில் பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டால், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், குறைந்தபட்சம் 25 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு, இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தனர். இல்லையெனில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்