போலி நகைகளை வைத்து பலே மோசடி... விசாரணையில் வெளியான பகீர் தகவல் - தூத்துக்குடியில் அதிர்ச்சி

x

தூத்துக்குடியில், போலி நகைகளை அடகு வைத்து, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த முகமது சாகுல் அமீது மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த தனுநாயகமும் சேர்ந்து, தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில், போலி நகைகளை அடமானம் வைத்து, 10.13 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர். இதேபோன்று, அங்குள்ள தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து, 5.4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்தாமல் அவர்கள் தலைமறைவான நிலையில், நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலி என தெரியவந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், முகமது சாகுல் அமீது, தனுநாயகம் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்