பி.எம் கிசான் கிரெடிட் திட்டத்திலும் மோசடி… வங்கிமேலாளர் உட்பட 21 பேர் அதிரடி கைது
லோன் கொடுக்கும் போது வாடிக்கையாளர்கள்கிட்ட சரியான டைம்க்கு திருப்பிக் கட்டனும்னு சொல்ற மேனேஜர்ர தான் பார்த்திருப்பீங்க, ஆனா, இங்கொரு மேனேஜர் நீங்க லோன் வாங்குன மட்டும் போதும், திருப்பி கட்ட வேண்டாம்னு சொல்லி இருக்காரு. அத நம்பிட்டு போன விவசாயிகளுக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா...?
அறுவடை காலங்கள்ல விவசாயிகள் வேற யார்கிட்டயும் கையேந்தி நிக்க கூடாதுனு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பி.எம் கிஷான் கிரேடிட் கார்டு திட்டம் .
நாளடைவில விவசாயம் மட்டுமில்லாம கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில்ல வாழ்வாதாரம்மா கொண்டு இருக்கிறவங்களுக்கும் இந்த திட்டத்தின் மூலமா குறைஞ்ச வட்டியில, குறுகிய கால கடன் உதவி வழங்கி வந்தாங்க.
இப்போ அந்த அருமையான திட்டத்துலயும், பி.எம் கிஷான் திட்டத்துல நடந்த மாதிரியே பல கோடி மோசடி நடந்திருக்கிறது வெட்டவெளிச்சமாகி இருக்கு.
நீலகிரி மாவட்டத்துல உள்ள குன்னூர் மற்றும் கீழ் கோத்தகிரி பிரான்ச்ல அசிஸ்டேன்ட் மேனேஜர்ரா பணியாற்றியவர் தான் ஜெயராமன். 2019-வது வருஷம் அவரோட பிரான்ச்ல இருந்து பல விவசாயிகளுக்கு கிசான் கிரேடிட் கார்டு திட்டத்தின் மூலமா லோன் கொடுக்கப்பட்டிருக்கு. அதுல, தான் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி பண்ண குற்றத்திற்காக இப்ப அவரை கைது பண்ணி இருக்காங்க.
என்ன நடந்துச்சு ? வங்கி அதிகாரிகளே மோசடி பண்ணது எப்படினு தெரிஞ்சிக்க மலைகளின் அரசியான நீலகிரிக்கு போனோம்.
பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் சட்டத்துக்கு முன்னாடி குற்றவாளிய நின்னுட்டு இருந்தாங்க. அவங்க எல்லாரும் நம்மகிட்ட சொன்ன முக்கியமான ஒரு பேரு வனசரகர் கனேசன், அவருடைய தொடர்பிலிருந்த 30-க்கும் அதிகமான விவசாயிகள் தான் மோசடி கும்பலோட டார்கெட்.
முதற்கட்டமா அரசாங்கத்துல இருந்து லோன் தர்றாங்க நீங்க அதை வாங்கிகோங்க சொல்லி ஆசைக்காட்டி இருக்காங்க , அந்த பணத்துல 20 % உங்களுக்கு, மீதி பணம் கம்பெனிக்குனு சொல்லி ஒரு தினுசா டீல் பேசி இருக்காங்க.
பத்து பைசா கூட திரும்ப தரவேண்டாம்னு வங்கி மேலாளர்ரே உத்ரவாதம் கொடுத்ததால பலரும் லோனை வாங்கி 20 % பணத்தை எடுத்துட்டு மீSதி பணத்தை வனசரகர் கணேஷன்கிட்ட கொடுத்திருக்காங்க, இப்படியே சுமார் 3 கோடிக்கு மேல லோன் கொடுத்திருக்கிறதா சொல்லப்படுது.
ஏற்கனவே லோன் மானியத்தோட கொடுக்கப்பட்ட காரணத்துனாலயும், விவசாயிகள் திரும்ப செலுத்த முடியாத காரணத்தையும் சொல்லி அதை தள்ளுபடி பண்ணிடலாம்ன்ற மாஸ்டர் பிளான் ஜெயராமன்கிட்டயும், கனேஷன்கிட்டயும் இருந்திருக்கு. ஆனா, திடீர்னு ஜெயராமனுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க எல்லாமே தலைக்கீழா மாறிடுச்சி.
வாங்குன கடனுக்கு லோன்ன கட்டச்சொல்லி எல்லா வாடிக்கையாளர் வீட்டுக்கும் மெசெஜ் போயிருக்கு. பதறிப்போனவங்க கனேசனை தொடர்பு கொண்டப்போ தான் அவங்க ஏமாற்றப்பட்டிருகிறது தெரியவந்திருக்கு.
இது தொடர்பா சம்பந்தப்பட்ட பிரான்ச்ல இருந்து 2021 - வது வருஷம் நீலகிரி மாவட்ட குற்ற பிரிவு போலிஸ்ல புகார் அளிச்சிருகாங்க, அந்த புகாரின் பேருல 24 பேர் மேல வழக்குபதிவு செஞ்சி ssssவிசாரணை மேற்கொண்ட போலீஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் ஜெயராமன், அவருக்கு உதவிய சீனியர் மேனேஜர் அனுஜ்குமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்ர கைது பண்ணி இருக்காங்க, தலைமறைவா இருக்கிற வனசரகர் கனேசனையும் மற்ற வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து வலைவீசி தேடி வர்றாங்க.