ரஷ்யாவுடனான போரில் பிரான்ஸ் பங்கேற்காது....வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்
பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக போரில் பங்கேற்காது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீரங்கிகளை வழங்கும் நாடுகள் தங்களுடன் நேரடியாக மோதுவதாகத் தான் கருத்தில் கொள்ளப்படும் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை அனுப்பும் மேற்கத்திய நாடுகளின் முடிவைத் தொடர்ந்து, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆன்-கிளேர் லெஜென்ட்ரே உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்பி ரஷ்யாவுடனான போரில் ஃப்ரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார்.
Next Story