"நான்கு வழி சாலை.." "எடுத்த நிலத்திற்கே இன்னும் பணம் வரவில்லை" மீண்டும் இடத்தை கேட்பது நியாயமா?
ஸ்ரீமுஷ்ணம் அருகே நங்குடி கிராமத்தின் வழியாக விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.இந்த பணிக்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் பலர் தங்களது மனைகள், வயல்கள் என பலவற்றையும் கொடுத்துள்ளனர். அதில் சிலருக்கு இன்னமும் முழுமையான நிவாரணம் கிடைக்காமல் உள்ளதால் அவர்கள் மன உளைச்சலுக்கும், உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே சாலை விரிவாக்க பணிக்கு இடம் அளவீடு செய்யப்பட்டு அதன்படி எடுக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடத்தில் பொதுமக்கள், வீடுகளை கட்டிக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியில் மீண்டும் பழைய அளவீடு செய்யப்பட்ட பகுதியை தாண்டி, கூடுதல் இடம் தேவை என கூறி அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர். அதிர்ச்சிடைந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Next Story