தோனி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்
தோனி என்ற ஒற்றைப் பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தோனி குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ள ஜெயக்குமார், சச்சின் அவுட் ஆனபிறகு டிவியை ஆஃப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும், இறுதிவரை மேட்ச் பார்க்க வைத்த இளைஞன் தோனி என புகழாரம் சூட்டியுள்ளார். தோனியின் ஓய்வறிந்து அவர் குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும் எனவும் ஜெயக்குமார் பதிவிட்டு உள்ளார். சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறிய நிலையில், ஜெயக்குமார் உருக்கமுடன் பதிவிட்டு உள்ளார்.
Next Story