பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் கிரண்
ரெட்டி பாஜகவில் இணைந்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னால் முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் கட்சி
முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான கிரண் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில்
வெற்றி பெறாததால் கிரண் ரெட்டி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் கட்சி தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு கடந்த மாதம் கிரண்ரெட்டி காங்கிரசிலிருந்து விலகினார். தற்போது அவர் பாஜாகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் கிரண் ரெட்டி தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
Next Story