"யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை"... வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், நேதாஜி சிலை அருகே உண்ணிச் செடி மூலம் வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பங்களை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் உள்ள மொத்த யானைகளில் 10 விழுக்காடு தமிழக வனப்பகுதியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டடங்களை அப்புறப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
Next Story