உலகிலேயே முதல்முறையாக.. 'விண்ணை தாண்டி' திருமணம்..! - சொர்க்கத்தில் மிதந்து தாலி கட்டலாம்..!

x

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை வித்தியாசமாக கொண்டாடி, வித விதமாய் வீடியோ, புகைப்படங்களை எடுத்து மகிழ்வோர் பலர்... இதில் பிரதான இடம் பிடிக்கிறது திருமணம்.

ப்ரீ வெட்டிங் ஷூட்டிங், கப்புள் ரீல்ஸ் முதல் திருமண வரவேற்பு நடனம் வரையில் கனவு, கற்பனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் ஜோடிகள் ஏராளம்...

இதில் வித்தியாசமாக ஆகாயத்தில் பறந்து கொண்டே திருமணம்.. நீருக்கு அடியில் திருமணம் என ஜோடிகள் கவனம் பெறுகிறார்கள்.

இந்த வரிசையில் நான் இல்லாமலா என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இணைந்திருக்கிறது.

கிருஷ்ணகிரியில் 2022-ல் மெட்டாவெர்ஸ் உலகில் திருமணம் செய்து ஆச்சர்யமடைய செய்தது தினேஷ் - நந்தினி ஜோடி...

இந்த வரிசையில் மேலும் ஒரு புதுமையை கொண்டு வந்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம்...

அதாவது பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை வழங்குகிறது. இதற்காக விண்வெளி கேப்ஸ்யூல்களில் ஜோடிகள் அழைத்துச் செல்லப்பட்டு, திருமணம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட கேப்ஸ்யூல்களில் திருமண ஜோடி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். என்னது பலூனிலா... என அச்சம் கொள்வோருக்கு, அவை ஹைட்ரஜனில் இயங்க கூடியவை, 19 கிலோ மீட்டர் வேகத்திலே செல்லும் பயப்பட வேண்டாம் என்கிறது ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்...

விண்வெளியில் விரும்பியபடி திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள், அங்கிருந்தவாறு விண்வெளியை திருமண ஜோடி ரசிக்கவும் பிரத்யேக ஏற்பாடுகள் உள்ளதாக சொல்கிறது அந்நிறுவனம்...

இந்த சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஒரு கோடி ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியாப்பு... இப்ப இதெல்லாம் ரொம்ப காஸ்டிலி என பலரும் டுவிட்டரில் வேடிக்கையாக பதிவிட... அமெரிக்காவிலே இந்த திருமணத்திற்கு டிமெண்ட் அதிகரித்திருக்கிறது.

ஆம் 2024-ல் தொடங்கப்பட உள்ள விண்வெளி திருமண சேவையில் பயன்பெற பலரும் முண்டியடித்துக் கொண்டு தங்களை பெயர்களை பதிவு செய்து வருகிறார்களாம்...


Next Story

மேலும் செய்திகள்